பிரேசிலில் நேற்று 64, 903- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று மேலும் 1,893 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
உலகளவில் கடந்த 24 மணி நேரங்களில் அதிகளவு தொற்று நோயாளர்கள் மற்றும் அதிக கொரோனா மரணங்கள் பிரேசிலில் பதிவாகியுள்ளன.
இதேவேளை, பிரேசிலில் இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று காலை வரையான தரவுகளின்படி 1 கோடியே 85 இலட்சத்து 13 ஆயிரத்து 305 ஆக பதிவாகியுள்ளது. உத்தியோகபூா்வ தரவுகளின் பிரகாரம் இன்றுவரை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 119 மரணங்கள் பதிவாகியுள்ளன.