நோர்வே தலைநகர் “ஒஸ்லோ” வில், பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ் வேகமாக பரவிவருவதால், 02.03.2021 நள்ளிரவு முதல், எதிர்வரும் 15.03.2021 வரை தலைநகரில் இறுக்கமான நடைமுறைகள் அமுல்படுத்தப்படுமென “ஒஸ்லோ” மாநகர நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
- அனைத்து உணவகங்களும் வாடிக்கையாளர்களுக்கு மூடப்படும்; எனினும் உணவுவகைகளை முன்பதிவு செய்து எடுத்துச்செல்ல (Take away) அனுமதியுண்டு.
- அத்தியாவசிய மளிகைப்பொருள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் மதுபான விற்பனைச்சாலைகள் (Vinmonopolet) தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்படும்.
- 20 பேருக்கு மேற்பட்ட, பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு ஒருங்கிணைவுகள் தடை செய்யப்படுகின்றன.
- அனைத்து வெளியக ஒன்றுகூடல்களும் தடை செய்யப்படுகின்றன.
- உயர்நிலைப்பள்ளியில் (Videregående skoler) மற்றும் வயது வந்தவர்களுக்கான பள்ளிகள் (Voksenopplæring) சிவப்பு நிலைக்கு கொண்டுவரப்படுகின்றன.
- உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான “கொரோனா” பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- மக்கள், மற்றவர்களது வீடுகளுக்கு அனாவசியமாக செல்வதும், ஒன்றுகூடுவதும் தவிர்க்கப்படுகிரது. எனினும், தனிமையில் வாழ்பவர்களுக்கான உதவிகளை செய்து வருபவர்களுக்கு இது பொருந்தாது.
- கட்டட பணியாளர்களிடையே வேகமாக “கொரோனா” பரவும் வாய்ப்பு இருப்பதால், கட்டடப்பணிகள் நடைபெறும் இடங்களுக்கான விசேட விதிமுறைகள் அமுலாகின்றன.
மேற்படி இறுக்கமான விதிமுறைகளை, “ஒஸ்லோ” மாநகரின் நிர்வாகத்தலைவர் “Raymond Johansen” இன்று அறிவித்துள்ளார்.