பிறழ்வடைந்த “கொரோனா” பரவல்! இறுக்கமடையும் நோர்வே தலைநகர்!!

You are currently viewing பிறழ்வடைந்த “கொரோனா” பரவல்! இறுக்கமடையும் நோர்வே தலைநகர்!!

நோர்வே தலைநகர் “ஒஸ்லோ” வில், பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ் வேகமாக பரவிவருவதால், 02.03.2021 நள்ளிரவு முதல், எதிர்வரும் 15.03.2021 வரை தலைநகரில் இறுக்கமான நடைமுறைகள் அமுல்படுத்தப்படுமென “ஒஸ்லோ” மாநகர நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

  1. அனைத்து உணவகங்களும் வாடிக்கையாளர்களுக்கு மூடப்படும்; எனினும் உணவுவகைகளை முன்பதிவு செய்து எடுத்துச்செல்ல (Take away) அனுமதியுண்டு.
  2. அத்தியாவசிய மளிகைப்பொருள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் மதுபான விற்பனைச்சாலைகள் (Vinmonopolet) தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்படும்.
  3. 20 பேருக்கு மேற்பட்ட, பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு ஒருங்கிணைவுகள் தடை செய்யப்படுகின்றன.
  4. அனைத்து வெளியக ஒன்றுகூடல்களும் தடை செய்யப்படுகின்றன.
  5. உயர்நிலைப்பள்ளியில் (Videregående skoler) மற்றும் வயது வந்தவர்களுக்கான பள்ளிகள் (Voksenopplæring) சிவப்பு நிலைக்கு கொண்டுவரப்படுகின்றன.
  6. உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான “கொரோனா” பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
  7. மக்கள், மற்றவர்களது வீடுகளுக்கு அனாவசியமாக செல்வதும், ஒன்றுகூடுவதும் தவிர்க்கப்படுகிரது. எனினும், தனிமையில் வாழ்பவர்களுக்கான உதவிகளை செய்து வருபவர்களுக்கு இது பொருந்தாது.
  8. கட்டட பணியாளர்களிடையே வேகமாக “கொரோனா” பரவும் வாய்ப்பு இருப்பதால், கட்டடப்பணிகள் நடைபெறும் இடங்களுக்கான விசேட விதிமுறைகள் அமுலாகின்றன.

மேற்படி இறுக்கமான விதிமுறைகளை, “ஒஸ்லோ” மாநகரின் நிர்வாகத்தலைவர் “Raymond Johansen” இன்று அறிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள