தமிழர்களுக்கு உரிமைகளை கொடுக்கக் கூடாது என்பதில் ஒத்த கருத்துடன் அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக சிங்களப் பேரினவாதத்தின் ஒரு சாரார் இந்திய அமெரிக்க மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களிடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெறுவதன் மூலமும்
பேரினவாதத்தின் மறுசாரார் சீனாவுக்கு சார்பாக இருந்து அவர்களது ஒத்துழைப்புக்களை பெற்று தமிழர்களை கொடூரமாக கொன்றொழித்து தமிழர்களது பொருளாதாரத்தை அழித்து தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்து அதனை பெரு வெற்றியாக சிங்கள மக்களுக்கு முன்காட்டி அவர்களது ஆதரவை பெற்று ஆட்சி சுகங்களை அனுபவிப்பதில் 2009 வரை ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பனை நிரூபித்துவந்தனர்.
ஆனால் 2009இல் இனவழிப்பில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையை முழiமாயாகத் தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதில் இந்திய அமெரிக்க மேற்குலக நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போட்டியில் பேரினவாதம் சிக்க ஆரம்பித்துள்ளது. இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது.
நாட்டை சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தேனும் தங்கள் ஆட்சிசுகங்களை ஆனுபவிக்க வேண்டுமென ராஜபக்சே கம்பனியும் ஏனைய தரப்புக்கள் இந்திய மேற்குலகுக்கு தாரைவார்த்து தாம் ஆட்சிக் கட்டிலேறி ஆட்சி சுகங்களை அனுபவிக்கவும் துடியாய் துடிக்கின்றனர். இதற்காகவே இப்போது தமக்குள் அடித்துக் கொள்ளும் நிலை தீவிரமடைந்து வருகின்றது. வீதாசார முறையில் மூன்றில் இரண்டு பெற முடியாதென்றிருந்த நிலையை தாம் மாற்றிவிட்டதாக மார்தட்டிக் கொண்டவர்கள் இரண்டு வருடங்கள் அட்சியை கொண்டு செல்ல முடியுமா என்று சிந்திக்கக் கூடியளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.
இந்த அழி நிலைக்குக் காரணம் இரண்டு சாராருமே தமிழ் மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்காமலே ஆட்சி அதிகாரத்தை தம்வசப்படுத்திக் கொள்ள அவர்கள் கையாண்ட அணுகுமுறைகளேயாகும். அந்த அணுகுமுறையானது அவர்கள் இன்று ஒரு வரை ஒருவர் காட்டிக்கொடுத்து தமக்குள் அடித்துக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டுள்ளது.
இது வெறும் ஆட்சி மாற்றத்துடன் முடியுமா அல்லது வல்லரசுகள் முட்டி மோதுமளவு நிலைக்குச் செல்லுமா பொறுத்திருப்போம்.
ஆனால் இந்த போட்டிச் சூழலை இனியேனும் தமிழ் மக்களது நலனை முன்னிலைப்படுத்திக கையாண்டால் நிச்சயம் தமிழினம் வெற்றிபெறும்.