பீதியை கிளப்பும் வடகொரியா – ரஷ்யா ஆயுத பலம்!

You are currently viewing பீதியை கிளப்பும் வடகொரியா – ரஷ்யா ஆயுத பலம்!

வடகொரியாவும் ரஷ்யாவும் ஒரே அணியில் இணையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இரு நாடுகளின் ஆயுத பலம் தொடர்பில் தரவுகள் வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய துறைமுக நகரமான Vladivostok-ல் விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜோங் உன் ஆகிய இரு தலைவர்களும் சந்திக்க இருக்கின்றனர். இந்த சந்திப்பு மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வெளியான தகவலின் அடிப்படையில் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால், அது கண்டிப்பாக எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும் என்றே நிபுணர்கள் தரப்பின் கருத்தாக உள்ளது.

இந்த சந்திப்பில், வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுத விநியோகம் முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்கிறார்கள். மட்டுமின்றி, உலக அரங்கில் புதிய கூட்டணிக்கான வாய்ப்பாகவும் இந்த சந்திப்பு மாறலாம் என்கிறார்கள்.

இருப்பினும் வடகொரியாவுடனான இந்த புதிய நெருக்கம் தென் கொரியாவுடனான தனது உறவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று ரஷ்யா கருதலாம் எனவும் ஒருசாரார் கூறுகின்றனர்.

ஆனால் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை உண்மையில் மிகவும் தீவிர போக்கு கொண்டது என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், வடகொரியா உடனான நெருக்கம் சாத்தியமே என்கின்றனர்.

ரஷ்யா உடனான வடகொரியாவின் நெருக்கத்தை ஏற்கனவே அமெரிக்க வெள்ளைமாளிகை எச்சரித்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான ஆயுத பேச்சுவார்த்தைகள் முறையான போக்கு அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தது.

வடகொரியாவிடம் தற்போது 6,500 ராணுவ டாங்கிகள், 3,000 எம்எல்ஆர்எஸ் ராக்கெட்டுகள் மற்றும் 30 அணு ஆயுதங்கள், 519 போர் கப்பல்கள், 947 போர் விமானங்கள் உள்ளன. மறுபக்கம் ரஷ்யாவிடம், 5,889 ஆணு ஆயுதங்கள், 12,500 டாங்கிகள், மற்றும் 4,000 எம்எல்ஆர்எஸ் ராக்கெட்டுகள், 4,182 போர் விமானங்கள், 598 போர் கப்பல்கள் உள்ளன.

ஆனால் வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கும் முடிவுக்கு ரஷ்யா வரும் என்றால் அது அந்த நாடு ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஐநா தீர்மானங்களை மீறும் செயல் என்றே கருதப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments