புதிய நம்பிக்கை தரும் மலேரியா மருந்துகள்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing புதிய நம்பிக்கை தரும் மலேரியா மருந்துகள்! “கொரோனா” அதிர்வுகள்!!

உலகெங்கும் வேகமாக பரவிவரும் “கொரோனா” தாக்குதலுக்கு எதிரான மருந்துகள் எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உலகெங்கிலுமுள்ள ஆய்வகங்களில் மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எனினும், பிரான்ஸ், தென் கொரியா மற்றும் அமெரிக்க வைத்தியர்கள் கூட்டாக செய்த ஆய்வுகளின்படி, மலேரியா நோய்க்கான மருந்தாக அறியப்பட்ட “Plaquenil” என்ற மருந்து, “கொரோனா” வைரசுக்கெதிராக பாவிக்கப்படலாமென தெரியவந்திருக்கிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, வைரஸ் கிருமிகள் உடலில் தொற்றுவதற்கு முன்னதாகவே இக்குறிப்பிட்ட “Plaquenil” என்ற இம்மருந்தை உடலில் செலுத்துவதால், வைரஸ் கிருமி உடற்கலங்களை ஊடறுத்து செல்வது தடுத்து நிறுத்தப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும், ஏற்கெனவே வைரஸ் பீடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வைரஸின் செயற்படுகளை இம்மருந்து கட்டுப்படுத்தியமை கண்டறியப்பட்டதாகவும் “Wall Street Journal” பத்திரிகையில் மருத்துவர்கள் வெளியிட்டிருந்த கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

“Plaquenil” என்ற இம்மருந்து, தற்போது மலேரியா மற்றும் கீல்வாதம் போன்ற நோய்களுக்கான மருந்தாக மட்டுமே பாவிக்கப்படுகிறது.

எனினும், இம்மருந்து “கொரோனா” வைரசுக்கெதிராக பாவிக்கப்படலாமா என்ற ஆய்வுகளை சீன மருத்துவர்களே முதன்முதலில் நடத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. “உருவக முறைமாற்றல்” மூலமாக உருமாற்றப்பட்ட மருந்தை, “கொரோனா” வைரசுக்கெதிராக பாவிக்கலாமா என சீன மருத்துவர்கள் ஆராய்ந்து வந்ததாகவும், எனினும், சீனாவில் “கொரோனா” ஏற்படுத்திய பெருந்தாக்கம் மேற்படி ஆய்வுகளை முழுமைப்படுத்துவதற்கான அவகாசத்தை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், மேற்படி “Plaquenil” என்ற மருந்தோடு, “Azitromax” என்ற மருந்தையும் சேர்த்து கலவையாக பரீட்சித்து பார்க்கப்பட்டதில் குறிப்பிடத்தக்களவு பயன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயிலும் “கொரோனா” வைரசால் பீடிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு இம்மருந்து கொடுக்கப்பட்டு பரிட்சித்துப்பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதெற்கென முதற்கட்டமாக 51 நோயாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேற்படி “Plaquenil” என்ற மருந்தை சோதிக்க விரும்பும் நாடுகள், நோயாளிகள் தீவிரா நிலைக்கு செல்வதற்கு முன்பாகவே, மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்து சோதிக்கும்படி அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

எனினும், உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில், “எபோலா” வைரசுக்கெதிராக பாவிக்கவென உருவாக்கப்பட்ட “Remdesivir” என்ற மருந்தே அதிக பலனை தருமென தான் நம்புவதாக தெரிவித்துள்ளது.

வயிற்று அசௌகரியங்களையும், வாந்தி போன்ற பக்கவிளைவுகளை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய இம்மருந்து, “கொரோனா” வைரசுக்கெதிராக செயற்படுமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டாலும், பொதுமக்கள் இம்மருந்தை பாவிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள