கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான புதிய வழிகாட்டுதல்களை பொது சுகாதார நிறுவனம் (FHI) வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள் பரிசோதிக்கப்படமாட்டார்கள் என்றும், மேலும், லேசான அறிகுறிகளைக் கொண்ட சுகாதார பணியாளர்கள் (Helsepersonel) இரண்டு நாட்கள் காத்திருந்து பின்னர் பரிசோதனை செய்யலாம் என்றும் புதிய வழிகாட்டுதல்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் ஆகியவற்றுடன் கடுமையான சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்களுக்கு FHi முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில்:
- அவசிய அனுமதி தேவைப்படுபவர்
- ஒரு நோயாளி அல்லது ஒரு சுகாதார நிறுவனத்தில் வாழ்பவர்
- கொரோனா நோயாளிகளுடன் சுகாதார சேவையில் பணியாற்றுபவர்கள் (இவர்கள் 2 நாட்களுக்கு மேல் நீடித்த லேசான சுவாச இடர் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யலாம்)
- 65 வயதிற்கு மேற்பட்டவர் மற்றும் நாள்பட்ட நோய்களைக் கொண்டிருபவர் (இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் நோய், புற்றுநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை).
- கொரோனா வைரஸ் நோயை (கோவிட் -19) உறுதிப்படுத்திய ஒரு நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.(அவசியம் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக முன்னுரிமை தளர்த்தப்படலாம்).
போன்றோருக்கும் பரிசோதனைகள் செய்யப்படும்!
- கோவிட் -19 அறிகுறிகள் இல்லாதவர்கள் பரிசோதிக்கப்பட மாட்டார்கள்.
- லேசான சுவாசக்குழாய் தொற்று உபாதை உள்ளவர்களுக்கு பொதுவாக பரிசோதனைகள் வழங்கப்படுவதில்லை.
- அறிகுறி நிவாரணத்திற்குப் பின் அவர்கள் ஒரு நாள் வீட்டில் இருக்க வேண்டும்.
- சுவாச நோய்த்தொற்றின் அறிகுறிகள் உள்ள அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
“யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எங்களால் உறுதியாக அறிய முடியாததால், அறிகுறி நிவாரணத்திற்குப் பின்பு அனைவரும் ஒரு நாள் வீட்டிலேயே இருக்குமாறு பரிந்துரைக்கிறோம்” என்று பொது சுகாதார நிறுவனத்தின் மருத்துவ ஆலோசகர் Trude Arnesen கூறியுள்ளார்.