முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சிறிய ஆலயம் உள்ளிட்ட 14 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 18 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆனந்தபுரம் பகுதியில் பத்து நிமிடம் வீசிய கடும் காற்று காரணமாக 14 வீடுகள் சேதமடைந்துள்ளன இதில ஒரு குடும்பத்தின் தற்காலிக வீடு முழுமையாக சேதடைந்துள்ளது
வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ள வீட்டுத்திட்டம் கிடைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் இதுவரை தற்காலிக கொட்டிலில் நான்கு பிள்ளைகளுடன் தங்கி வாழ்ந்த குடும்பத்தின் வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டு சுவர் உடைந்து வீழ்ந்துள்ளதுடன் வீட்டில் இருந்து பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.
ஆனந்தபுரம் பகுதியில் மக்களின் வீடுகள்,நெற்களஞ்சியம்,சிறிய ஆலயம் கால்நடைகளின் கொட்டில்கள் என்பன கடும் காற்றினால் சேதமடைந்துள்ளன. ஆனந்தபுரம் உள்வீதியில் பனைமரம் ஒன்று முறிந்து மின்சார கம்பியின் மேல் வீழ்ந்துள்ளன.
கிராமத்தில் உள்ள ஆலயத்தின் மேற்கூரைகள் காற்றினால் 15 மீற்றர் தூரத்திற்கு அப்பால் தூக்கிவீசப்பட்டுள்ளன.