புலமை பரிசில் பரீட்சையில் பல்வேறு சர்ச்சை!

You are currently viewing புலமை பரிசில் பரீட்சையில் பல்வேறு சர்ச்சை!

நேற்றைய தினம் (22)  இடம்பெற்ற 5ம் தர புலமை பரிசில் பரீட்சையில் எழுந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து, விசாரணை நடத்தப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவிக்கின்றார்.

விசாரணைகளின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கல்கமுவ, வெலிமட, நாகொட உள்ளிட்ட சில பரீட்சை மத்திய நிலையங்களில் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

நேரம் கடந்து பரீட்சை வினாதாள்கள் வழங்கப்பட்ட போதிலும், அவ்வாறு தாமதித்த நேரத்திற்கு சரியான நேரத்தை விடை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.

மேலும், பரீட்சை நடைபெற்ற பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சுவர் கடிகாரம் காட்சிப்படுத்தப்பட்ட போதிலும், ஏனைய பாடசாலைகளிலிருந்து பரீட்சை நடைபெற்ற பாடசாலைக்கு வருகைத் தந்து, பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு அவ்வாறான வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் கூறினர்.

விடை எழுதுவதற்கு தாள்கள் வழங்கப்படாமை, பக்கச்சார்பாக செயற்பட்டமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், மாணவர்களினால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிக்கின்றார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments