முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சிறீலங்கா காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட புளியங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் சிறீலங்கா காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
புளியங்குளம் குளத்தில் நேற்று சடலம் ஒன்று மிதப்பது தொடர்பில் ஒட்டுசுட்டான் சிறீலங்கா காவற்துறையினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறை, சடலத்தை மீட்டுள்ளதுடன். சடலம் யாருடையது எனவும் அடையாளம் கண்டுள்ளனர்.

குருநாகலை பிறப்பிடமாகவும், பண்டாரவன்னியனை பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான கறுப்பையா சேகரன்( வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதாக உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர் என்று உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா காவற்துறை சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.