பெண் ஒருவருடைய எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளன !

You are currently viewing பெண் ஒருவருடைய எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளன !

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதை குழியில் இருந்து  ( 08.09.2023) வெள்ளிக்கிழமையும்
பெண் ஒருவருடைய  மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட இந்த உடல் எச்சங்களிலும் துப்பாக்கிச் சூடு நடாத்தப் பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் அவற்றுடன் துப்பாக்கி சன்னங்களும், காணப்பட்டு மீட்கப்பட்டதாகவும் தெருவிக்கப் பட்டுள்ளது.

அதேநேரம் நேற்றைய நாள் அகழ்வில் போது பெண் ஒருவருடைய மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு எச்சங்கள் மீட்கப்பட்டு அதனுடன் மார்பக உள்ளாடையும்,முகத்தை மறைத்துக் கட்டப் பயன் படுத்தப் பட்டதாக நம்பப்படும் துணியும், துப்பாக்கி சன்னங்கள் மூன்றும் மீட்கப்பட்டிருந்தன.

இதேநேரம் இன்றைய புதைகுழி அகழ்வுப் பணிகளை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மூத்த தொல்லியல்த் துறை விரிவுரையாளர் கலாநிதி,  பரமு – புஸ்பரட்ணம் அவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இன்றுடன் மூன்றாவது நாளாக நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது பெண்களின் எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில்-

மேலும் பல உடலங்களின் எச்சங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் இவை (2009)ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரின் போது சிறிலங்கா படைகளிடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என்ற அச்ச நிலை காணப்படுவதாக-

அந்த அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டு வரும் முல்லைத்தீவு அரசியல் செயற்பாட்டாளர் துரைராஜா- ரவிகரனால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை   புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பில் இன்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் அப்பகுதியில் கடமையில் நின்ற சிறீலங்கா காவல்த்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர் எனத் தெருவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவருடைய எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளன ! 1பெண் ஒருவருடைய எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளன ! 2பெண் ஒருவருடைய எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளன ! 3

பெண் ஒருவருடைய எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளன ! 4பெண் ஒருவருடைய எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளன ! 5பெண் ஒருவருடைய எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளன ! 6

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments