திருகோணமலை பெரியகுளம் தமிழர் பகுதியில் பிக்கு ஒருவரால் அடாத்தாக விகாரை அமைப்பதற்கு மேற்கொண்டு வந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில்
நேற்றுச் சனிக்கிழமை ( 09.09.2023) அப்பகுதியில் குறித்த பிக்குவால் சிறீலங்கா காவல்த்துறையினரின் பாதுகாப்புடன் விகாரைக்கான பெயர்ப்பலகை ஒன்று கொண்டு வரப்பட்டு நாட்டப்பட்டுள்ளதுடன் பௌத்த கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.
இது விடயம் தொடர்பில் அப்பகுதி தமிழ் மக்களாலும் இன உணர்வாளர்களாலும் அரசியல்த் தலைவர்களாகவும் அண்மையில் கண்டன எதிர்ப்புப் போராட்டங்கள் நடாத்தப்பட்டிருந்தன.
அதேநேரம் குறித்த இந்தப் பகுதியில் விகாரை அமைப்பதற்குப் பிரதேச சபை,மற்றும் பிரதேச செயலகம் என்பன தடைவிதித் திருக்கின்ற நிலையிலும்,
மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானால் இந்த இடத்தில் விகாரை அமைப்பதானது இன முரண் பாட்டை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும்,
பிக்குவால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இனவாத அடாவடிச் செயற்பாட்டிற்குத் திருகோணமலை சிறீலங்கா காவல்த்துறையினரும் உடந்தையாகச் செயற்பட்டுள்ள
மை தமிழ் மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.