பெருவில் தங்க சுரங்க தீ விபத்து: சம்பவ இடத்திலே உடல் கருகி 27 பேர் உயிரிழப்பு!

You are currently viewing பெருவில் தங்க சுரங்க தீ விபத்து: சம்பவ இடத்திலே உடல் கருகி 27 பேர் உயிரிழப்பு!

பெரு நாட்டில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சம்பவ இடத்திலே உடல் கருகி 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் அரிகுயுடா பகுதியில் இயங்கி வரும் தங்க சுரங்கத்தில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலே கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

லத்தின் அமெரிக்க நாடுகளில் வரலாற்றில், இதுவரை காணாத சுரங்க தீ விபத்தென பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரேக்விபா பகுதியில் உள்ள லா எஸ்பெரான்சா சுரங்கத்திற்குள் உள்ள சுரங்கப்பாதையில், மின் கம்புகள் தீ பிடித்து எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதென, பெரு காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் உறுதி செய்துள்ளனர்.

பெருவின் தலைநகரான அரேகிபா நகரத்திலிருந்து 10 மணி நேர பயண தூரத்திலுள்ள, காண்டேசுயோஸ் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில், ஏற்பட்ட வெடிப்புக்கு பிறகு தீப்பிடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திடீரென ஏற்பட்ட விபத்தில் யானகிஹுவா நகரில் உள்ள சுரங்கத்திற்குள், இருந்த மின் கம்பத்தில் தீ பற்றியுள்ளது. சுரங்கத்தின் 100 மீட்டர் ஆழத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தப்பிக்க முடியாமல், உடல் கருகி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உயிர் பிழைத்தவர்கள் பற்றிய தகவல்களோ, தீ விபத்து ஏற்பட்ட போது சுரங்கத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது பற்றிய சரியான தகவல் கிடைக்கவில்லை.

பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்திருப்பார்கள் என, யானாகிஹுவா மேயர் ஜேம்ஸ் காஸ்கினோ ஆண்டினா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments