பேரழிவை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை தயாரிக்க உதவும் தொழினுட்பங்களை ஈரானுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், நோர்வேயின் புகழ்பெற்ற, பொறியியல் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகமான “NTNU” வை சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்களை நோர்வே உளவுத்துறை தடுத்து வைத்துள்ளது.
அண்மையில் கல்வியியல் நோக்கங்களுக்காக நோர்வேயின் குறித்த இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த ஈரானிய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினரை வழிநடத்திய மேற்படி இரு ஆராய்ச்சியாளர்களும், பல்கலைக்கழகத்தில் இரகசியமாக இருந்திருக்கக்கூடிய ஆய்வகம் ஒன்றுக்கு குறித்த ஈரானிய குழுவினரை அனுமதியில்லாமல் அழைத்து சென்றதாகவும், அந்த ஆய்வகத்தின் கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பேரழிவுகளை விளைவிக்கக்கூடிய ஆயுத தயாரிப்பு பற்றிய விபரங்களை ஈரானிய குழுவினர் பெற்றுக்கொள்ள அனுசரணையாக இருந்ததாகவும் குறித்த இரு ஆராய்ச்சியாளர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்விடயம் பல்கலைக்கழக வட்டாரங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.