மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு இயற்கைவளம் நிறைந்த பகுதியாக கொக்கட்டிச்சோலை அமைந்துள்ளது. அத்துடன் பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம், மீன்பிடி அத்துடன், இறால் வளர்ப்பு என்பனவாகும்.
இக்கிராமத்தின் மீது 28.01.1987 இல் சிறிலங்கா இராணுவத்தின் பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கொண்டவெட்டுவான், களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கல்லடி ஆகிய இடங்களிலிருந்து கவசவாகனங்களுடன் முன்னேறிய இராணுவத்திற் குண்டுவீச்சு விமானங்களும் உலங்குவானூர்திகளும் மேலதிக உதவித் தாக்குதல்களை வழங்க கொக்கட்டிச்சோலை கிராமத்தினுள் நுழைந்த படையினர் அம்மக்களை மிகமோசமாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததுடன், படுகொலைகளையும் செய்தனர்.
இதில் குறிப்பாக அமெரிக்கா நிதி உதவி, கண்காணிப்புடன் மகிழடித்தீவு இறால் பண்ணை இயங்கி வந்தது. இங்கு பெருமளவு ஏழைமக்கள் வேலை செய்து வந்தனர். அங்கு வேலை செய்த நூற்றுமுப்பத்தைந்து பொதுமக்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்து இறால் பண்ணைக்குள்ளேயே போட்டதால் இறால் பண்ணை மனித உடல்களை கொண்ட இரத்தப் பண்ணைகளாக காட்சியழித்தது. அத்துடன் கொக்கட்டிச்சோலை அரிசியாலையில் தஞ்சமடைந்திருந்த இருபத்துநான்கு பேரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.