பொதுமக்களை தாக்க முயன்றவர் ஒஸ்லோ காவல்துறையால் சுடப்பட்டார்!

You are currently viewing பொதுமக்களை தாக்க முயன்றவர் ஒஸ்லோ காவல்துறையால் சுடப்பட்டார்!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் “Bislett” என்னுமிடத்தில், நபரொருவரை கத்தியால் தாக்க முயன்ற ஒருவர் ஒஸ்லோ காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்துள்ளார்.

கையில் கூரிய கத்தியோடு சாலையோரத்தில் நின்ற குறித்த நபர், வேறொருவரை கத்தியால் குத்துவதற்கு முயன்றதாக குறிப்பிடும் காவல்துறை, அவரை தடுத்து நிறுத்துவதற்காக காவல்துறையின் வாகனத்தை அவருக்கு நெருக்கமாக செலுத்தி, வாகனத்தால் அவரை நெருக்க முயன்ற வேளையில், குறித்த சந்தேக நபர் காவல்துறையின் வாகனத்துக்குள் அத்துமீறி நுழைந்து காவல்துறையினரையும் தாக்க முற்பட்டதால் அவரை தாம் சுட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

பொதுமக்களை தாக்க முயன்றவர் ஒஸ்லோ காவல்துறையால் சுடப்பட்டார்! 1

எனினும், பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, காவல்துறையால் சுடப்பட்ட சந்தேகநபர் வைத்தியசாலையில் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலையில், அதிகமான மக்கள் நடமாட்டம் இருந்த வேளையில், பல பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை தோற்றுவித்திருந்தது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply