உலக நாடுகள், அனைத்து பொது சுகாதாரக் கட்டமைப்பின் அடிப்படையான விதிகளை நடைமுறைப்படுத்த கவனம் செலுத்துவதுதான் நீண்டகால சவாலாக, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி என உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணரான ரியான் (Michael J. Ryan) தெரிவித்துள்ளார்.
சோதனைக்கு உட்படுத்துதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற நடைமுறைகளை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
கற்பனை செய்யமுடியாத இழப்புகளைத் தவிர்க்க, மறுபடியும் உலக நாட்டின் அரசுகள், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், தடம் வழி கண்டறிதல், சோதனைக்கு உட்படுத்துதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற நடைமுறைகளை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.