போலந்தில் வைரஸ் தொற்றால் 23 பேர் உயிரிழப்பு !

You are currently viewing போலந்தில் வைரஸ் தொற்றால் 23 பேர் உயிரிழப்பு !

போலந்தில் லெஜியோனேயர்ஸ் எனப்படும்  நோயினால் 23 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த நோயினால் இதுவரை 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செப்டம்பர் 07 ஆம் திகதிற்கு பிறகு புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

லெஜியோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படும் குறித்த நோயானது, கடுமையான நிமோனியாவை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

லெஜியோனெல்லா பாக்டீரியாக்கள் அசுத்தமான நீரில் வளரக்கூடியது. இந்நிலையில் போலந்தின் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமானது, உள்ளுர் நீர் இணைப்பை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் நோய் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை நோய்த்தொற்றுக்கான ஆதாரம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் வெடித்ததற்கான மூலத்தைக் கண்டறிய இன்னும் விசாரணைகள் நடந்து வருவதாக WHO தெரிவித்துள்ளது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments