போலி மரணசான்றிதழ்தயாரிப்பு கிராம அலுவலகர்,மரணவிசாரண விசாரணை அதிகாரி பிணையில் விடுதலை!

You are currently viewing போலி மரணசான்றிதழ்தயாரிப்பு கிராம அலுவலகர்,மரணவிசாரண விசாரணை அதிகாரி பிணையில் விடுதலை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உயிருடன் இருக்கும் ஒருவருக்கும் மற்றும் உயிரிழந்த ஒருவருக்கும் போரின் போது உயிரிழந்துள்ளதாக மரண சான்றிதழ் வழங்கிய  கிராமசேவகர்,மரணவிசாரணை அதிகாரி இதனை ஏற்பாடு செய்தவர் என மூவர்  மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலீசாரால் கடந்த 16.09.2020 அன்று கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.


இது தொடர்பில் தெரியவருகையில் புதுக்குடியிருப்ப 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவில் உள்ள குடும்பத்தின் மக்கள் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து  வருகின்றார் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக அவரது பெற்றோர்கள் போர்காலத்தில் உயிரிழந்துள்ளதாக மரண சான்றிதழ் தயாரித்து அனுப்பியுள்ளார்கள்.


குறித்த யுவதியின் தந்தை 2014 ஆம் ஆண்டு நோய்வாய்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது தயார் தற்போதும் வழ்ந்து வருகின்ற நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது தாய் தந்தை போரின் போது உயிரிழந்துள்ளதாக  கிராம அலுவலகர் உறுதிப்படுத்தி கடிதம் கொடுத்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு பகுகுதியில் உள்ள மரணவிசாரணை அதிகாரியிடம் உறுதிப்படுத்த கோரியபோது அவர் போர் காலத்தில்  இங்கு வாழாத காரணத்தினால் முள்ளியவளையில் உள்ள மரணவிசாரணை அதிகாரியிடம் வாங்குமாறு பரிந்துரை செய்துள்ளார்.

இன்னிலையில் தாயார் உயிருடன் உள்ள நிலையில் மரணச்சான்றிதழ் மற்றும் உயிரிழந்த தந்தைக்கு இரண்டாவது மரண சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இதன் உண்மைப்பிரதிகள் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டும் குறித்த மகளுக்கு உடியுரிமை இதுவரை கிடைக்கவில்லை 

இன்னிலையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இது தொடர்பான விசாரணையினை முல்லைத்தீவு மாவட்ட  விசேட குற்றவிசாரணைப்பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பொது போலியாக மரணசான்றிதழ் தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள