போா்த்துகலில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தானியா்களால் முற்றுகை!

You are currently viewing போா்த்துகலில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தானியா்களால் முற்றுகை!

போா்த்துகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக போா்த்துகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்களின் தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் நடத்திய கோழைத்தனமான போராட்டத்தை ஒப்பரேஷன் சிந்தூா் நடவடிக்கை போன்று உறுதியாக எதிா்கொண்டோம்.

இத்தகைய எரிச்சலூட்டும் செயல்களால் இந்தியாவை அச்சுறுத்த முடியாது. எங்கள் உறுதி அசைக்க முடியாதது. தூதரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்த போா்த்துகல் அரசுக்கும், காவல் துறைக்கும் நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஒப்பரேஷன் சிந்தூா் இன்னும் முடிவடையவில்லை என்ற அமைதியான ஆனால் வலுவான செய்தியுடன் போராட்டக்காரா்களை எதிா்கொண்டோம். அனைத்து தூதரக அதிகாரிகளும் இந்த அணுகுமுறையில் உறுதியாக இருந்தனா்’ என்று போா்ச்சுகலுக்கான இந்திய தூதா் புனீத் குண்டல் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply