கிளிநொச்சி கோணாவில் பகுதி கிராம மக்களும் சிறிலங்கா காவல்த்துறையினரும் இணைந்து தேடுதலை மேற்கொண்டபோது பற்றைக் காட்டுக்குள் இருந்து கசிப்பு உற்பத்திக்காக தயாரிக்கப்பட்ட நிலையிலிருந்த 61 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்கள், கொள்கலன் என பல பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஊற்றுபுலம் பகுதியில் 7 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்கள் என கிளிநொச்சி மாவட்ட காவல்த்துறையின் மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரி சதுரங்க குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து செயல்பட்டு கிராமங்களில் கசிப்பு ஒழிப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட சிறிலங்கா காவல்த்துறையின் மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரி சதுரங்க அவர்கள் கிளிநொச்சி கோணாவில் கிராம மக்கள் ஏனைய கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் இவர்களைப் போன்று ஏனைய கிராம மக்களும் இணைந்து செயல்பட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை முற்றாக நிறுத்த முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட காவல்த்துறையின் மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரி சதுரங்க தெரிவித்தார்.
![மக்களின் பலத்துடன் களமிறங்கிய சிறிலங்கா காவல்துறை பெருமளவு கசிப்பும் உற்பத்திப் பொருட்களும் மீட்பு 1](https://www.thaarakam.com/wp-content/uploads/2020/01/FB_IMG_1578307227018-560x420-1.jpg)
![மக்களின் பலத்துடன் களமிறங்கிய சிறிலங்கா காவல்துறை பெருமளவு கசிப்பும் உற்பத்திப் பொருட்களும் மீட்பு 2](https://www.thaarakam.com/wp-content/uploads/2020/01/FB_IMG_1578307239199-696x522-1.jpg)
![மக்களின் பலத்துடன் களமிறங்கிய சிறிலங்கா காவல்துறை பெருமளவு கசிப்பும் உற்பத்திப் பொருட்களும் மீட்பு 3](https://www.thaarakam.com/wp-content/uploads/2020/01/FB_IMG_1578307207119-696x522-1.jpg)