மங்கோலியாவில் தீவிரமாக பரவி வரும் பிளேக் நோய்!

You are currently viewing மங்கோலியாவில் தீவிரமாக பரவி வரும் பிளேக் நோய்!

breaking

மங்கோலியாவில் பிளேக் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதனல் ஒரு மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டது.

உலன்பேட்டர்,

மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் வேகமாக பரவி வருகிறது. இது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆகும். இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லையெனில் பாதிக்கப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் மரணத்தை தழுவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த வைரஸ் பொதுவாக கொறித்து உண்ணும் விலங்குகளிடம் காணப்படுவதால் அங்கு அணில் வகையை சேர்ந்த மர்மோஸ் என்ற விலங்குகளை வேட்டையாடுவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சட்ட விரோதமாக அதனை பலர் வேட்டையாடி உண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அங்கு பிளேக் நோய் அறிகுறியுடன் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில் அங்குள்ள 17 மாகாணங்கள் பிளேக் நோய் அபாயத்தில் உள்ளதாக நோய்களுக்கான தேசிய மையம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில் பிளேக் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட கோவி-அல்டாய் என்ற மாகாணத்தை தனிமைப்படுத்தி உள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply