மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைது!

You are currently viewing மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறீலங்கா காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் யாழ்ப்பாணம் மாவட்ட  போதை தடுப்பு பிரிவினரால் நேற்று(11) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 10 கிராம் 670 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

யாழ்ப்பாணம்- இணுவில் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிறீலங்கா காவற்துறை  அத்தியட்சகரின் கீழ் இயங்கும்  புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் சிறீலங்கா காவற்துறையினர் நேற்று(11) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவரிடமிருந்து 110 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply