மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர் களின் கால் நடைகளின் பெரும் மேச்சல்த்தறை அமைந்துள்ள எல்லைக் கிராமங்களான மயிலந்தமடு, மற்றும் மாதவனை பகுதிகளை அடாத்தாக ஆக்கிரமித்து சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி
தமது மேச்சல்த் தறைகளை மீட்டுத் தருமாறு கோரி அப்பகுதிப் பண்ணையாளர் களால் சித்தாண்டி பிரதான சாலையோரம் கொட்டகை அமைத்து (இரவு, பகலாக) சுழற்சி முறையில் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று (30.09.2023) சனிக்கிழமை -16,வது நாளாக மாபெரும்
சாலையோர சங்கிலிப் போராட்டமாக முன்னெடுக்கப் பட்டுள்ளது.
காலை-07,மணிக்கு ஆரம்பமான போராட்டத்தில் பண்ணையாளர்களின் குடும்பங்கள் சகிதம் மிக நீண்ட வரிசையாக நின்று இந்தச் சங்கிலிப் போராட்டம் நடாத்தப் பட்டுள்ளது.
இதன் போது பெண்களும்,ஆண்களும் தமது குழந்தைகளை கையில் ஏந்தியவாறும்
சிறுவர்கள், இளையோர்கள், வயோதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது கால்நடைகளின் மேச்சல் தறைகளை மீட்டுத் தருமாறும்
தமது கால் நடைகளைப் பாதுகாத்து தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல வழி ஏற்படுத்தித் தருமாறும் கண்ணீர் மல்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றைய நாள் போராட்டகளம்…
தமிழ்ப் பண்ணையாளர்களின் பூர்வீக மேச்சல்த்தறை சிங்கள ஆக்கிரமிப்பு முன்பு ..
சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைக்காக உழவு செய்யப்பட்ட நிலையில்….
சிங்களவர்களால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டு காயமடைந்த கால் நடைகள்…
அடித்தும் சுட்டும் கொல்லப்பட்ட கால் நடைகள்….