தமிழர் தாயகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிரா
மமும் தமிழ் பண்ணையாளர்களின் கால் நடைகளின் பெரும் மேச்சல்த்தறை அமைந்துள்ள பகுதியுயான மயிலந்தமடு மாதவனையில் சிங்களக் காடையர்களால் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு பண்ணையாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து ஆராயவென நேற்று அங்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட சைவ ,கிறீஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் அடங்கிய சர்வமதத் தலைவர்கள், பண்ணையாளர்கள்,ஊடகவியலாளர்கள் ஆகியோர் அப்பகுதியில் வைத்து இனவாத பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் சிங்கள காடையர்களால் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பல மணி நேரங்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (22.08.2023) செவ்வாய்க்கிழமை பகல்-(12)மணிக்கு அப்பகுதிக்குச் சென்று ஆய்வுகள் செய்துவிட்டு,கலந்துரையாடல்களை நடாத்திவிட்டு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திடீரென அப்பகுதியில் பௌத்த பிக்கு
தலைமையில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள- 150,ற்கும் மேற்பட்ட சிங்களவர்களால் அங்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் இடைமறிக்கபட்டு,சுற்றிவளைக்கப்பட்டதுடன்,
வாகனங்களில் இருந்தவர்களுக்கு கடுமையான கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வாகனத்துடன் கொழுத்துவேன் என குறித்த பிக்குவால் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டு வாகனச் சாவிகளும் பறிக்கப்பட்டு சைவ மதகுருவின் கொண்டையில் பிடித்து தாக்கப்பட்டதுடன் மற்றும் சிலரும் தாக்கப்பட்டனர்.
இது குறித்து உடனடியாக மாவட்ட சிறீலங்கா காவல்துறைக்கு தொலைபேசியில்தொடர்புகொண்டுதெரிவித்தபோதும் காவல்துறையினர் சுமார் -(03-30) மணி நேரங்கள் கழித்தே அவ்விடத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற காவல்துறை தலைமை அதிகாரிகள் இருவரும் குறித்த பிக்குவின் காலை வீழ்ந்து வணங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதேவேளை உடனடியாகவே சிறைப்பிடிக்கப் பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன்,அவர்களால் நாடாளுமன்றிற்கு தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு
மாவட்ட ஊடகவியலாளராகளால் கண்டனப் பதாதைகள் தாங்கிய பெரும் போராட்டம் நடாத்தப்பட்டது.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்களை தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின்தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம்-சுரேஸ் ஓட்டமாவடி நாவலடியில்
சந்தித்து கலந்துரையாடியுள்ளார் அவருடன் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மக்களின் முக்கியமான வாழ்வாதாரமாகவும் அன்றாட
ஜூவானோபாயமாகவும் திகழும் கால் நடை வளர்ப்பிற்கான பெரும்மேச்சல் தறைகள் அமைந்துள்ள மயிலந்தமடு மாதவனை தற்போதய அரசின் பின்புலத்துடன் சிங்களவர்களால் அத்து மீறி ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையிலும்
அப்பகுதி வாழ் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு விரட்டப்பட்டு வரும் நிலையிலும் கால் நடைகளை மேச்சலில் ஈடுபடுத்த முடியாதவாறு சிங்களவர்களாiaல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும் அத்தோடு கால் நடைகள் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு கொல்லப்பட்டு வரும் நிலையிலும்
தொடர்ச்சியாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் இத்தப் பிரச்சினைகள் குறித்து ஆராயவே மதத்தலைவர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.