மட்டக்களப்பில் 27பேருக்கு தொற்று!

You are currently viewing மட்டக்களப்பில் 27பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் 27 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 20 பேர் வாழைச்சேனை பகுதியை சேர்ந்தவர்களாவர். இதில் 18 பேர் பிரபல்யமான உணவகம் ஒன்றில் பணி புரிபவர்களாவர்.

மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிரிவில் மூவரும் ,களுவாஞ்சிகுடி பிரிவில் ஒருவரும், செங்கலடி பிரிவில் ஒருவரும் ,ஆரையம்பதி பிரிவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை மட்டக்களப்பு பிராந்தியத்தில் 1073 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 94 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் மரணித்துள்ளனர். 970 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மூன்றாவது கோவிட் 19 அலையானது இம்மாதம் 22 ஆம் திகதியாகும். இது முதலிரண்டு அலைகளைப்போலல்லாமல் நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு ஒட்சிசன் தேவைப்படும் நிலைமை அதிகமாக காணப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply