மட்டக்களப்பு மாவட்டத்தில் 73 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் நேற்று மேலும் 114 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் – 73 பேர்
அம்பாறை மாவட்டத்தில் – 32 பேர்
திருகோணமலை மாவட்டத்தில் – 09 பேர்
இவ்வாறு நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.