மட்டு. வந்தாறுமூலை மாரியம்மன் கோவில் உற்சவத்தில் பங்கேற்ற 114 பேருக்கு கொரோனா!

You are currently viewing மட்டு. வந்தாறுமூலை மாரியம்மன் கோவில் உற்சவத்தில் பங்கேற்ற 114 பேருக்கு கொரோனா!

சுகாதார பிரிவினரின் அனுமதியை மீறி சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்ற மாரியம்மன் கோவில் உற்சவத்தில் பங்கேற்றவர்களில் 114 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று செங்கலடி சுகாதார பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில் களுவன்கேணி வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் உற்சவ விழாவில் கலந்துகொண்ட சுமார் 300 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே 114 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆலய உற்சவ விழாவிற்கு 15 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதியினை வழங்கிய போதும் அந்த அனுமதியை மீறி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத் தரப்பினரது அறிவுறுத்தல்களை மீறி ஆலய உற்சவ விழாவினை சுகாதார விதிமுறைகளை மீறி கட்டுப்பாடின்றி நடத்தியதன் விளைவாகவே இந்நத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையின் போது 114 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியினை முழுமையாக முடக்குவதற்கான நடவடிக்கையினை செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீநாத் மற்றும் வந்தாறுமூலை சுகாதார காரியபலயத்திற்கு பொறுப்பான சிவ காந்தம் ஆகியோர் இணைந்து பரிந்துரையினை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இன்னும் பல தொற்றாளர்கள் இருக்கலாம் என நம்மபடுவதனால் தொடர்ச்சியாக அனைத்து பொது மக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply