வடமாகாணத்தில் சட்டத்துக்கு புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் சாவகச்சேரியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சாவகச்சேரி பஸ் நிலையம் முன்பாக இன்று மாலை இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
கடந்த இரு வாரங்களாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்விற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் வளம் மிகவும் சுதந்திரமான முறையில் சூறையாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தாய் மண்ணைக் காக்க கட்சி பேதமின்றி ஒன்றிணைவோம் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.