ஊரடங்கு சட்டம், இன்று தளர்த்தப்பட்ட பகுதிகளில், இன்று சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் மதுபான நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
மிக நீண்ட நாள்களுக்கு பின்னர் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். பல இடங்களில் மதுப்பிரியர்கள் குழுமி நின்றதால் கொரோனா பரவும் ஆபத்தும் காணப்பட்டது. எனினும சில இடங்களில், சமூக இடைவெளியை பேணுவதில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதேபோன்று, சிகை அலங்கார நிலையங்களிலும் முடிவெட்டுவதற்காக பொதுமக்களும் சிறுவர்களும் நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.
வீதியின் பிரதான இடங்களில் வீதிப்போக்குவரத்து காவல்த்துறையினர் கடமையில் ஈடுபட்டதுடன், இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)