மதுபான விற்பனைக்கு தடை போட்டது, ஒஸ்லோ நகரசபை நிர்வாகம்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing மதுபான விற்பனைக்கு தடை போட்டது, ஒஸ்லோ நகரசபை நிர்வாகம்! “கொரோனா” அதிர்வுகள்!!

ஒஸ்லோவின் கேளிக்கை விடுதிகள்இரவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மதுபானவிற்பனையை 21.03.20 இரவு 20:30 மணியுடன் தடைசெய்து ஒஸ்லோ நகரசபை நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.

கொரோனா” பரவலையடுத்துவைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடுஇவ்வாறானஇடங்களுக்குநகர நிர்வாகத்தால் விடப்பட்ட பரிந்துரைகளை இந்த இடங்கள் சரியாககடைப்பிடிக்கவில்லை என காரணங்காட்டியே மேற்படி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில்நகரசபையின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனவும்இதுநீடித்தால்மதுபான விற்பனையை தடை செய்வதைத்தவிர வேறு வழியில்லையென நகரசபைநிர்வாகத்தலைவர் “Raymond Johansan” நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்இன்றுஇத்தடை அமுல்ப்படுத்தப்படுகிறது.

ஒஸ்லோ நகரத்திலுள்ள 1300 இவ்வாறான இடங்களில் சுமார் 50 – 60 இடங்களே கடந்தநாட்களில் திறக்கப்பட்டிருத்தன.

இன்று விதிக்கப்பட்ட மதுபான விற்பனைக்கான தடையால்தமது வாழ்வாதாரம்பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள