822 பில்லியன் யூரோக்களை ஒதுக்கும் ஜேர்மனி! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing 822 பில்லியன் யூரோக்களை ஒதுக்கும் ஜேர்மனி! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பரவலால் சரிவை சந்திக்கும் ஜேர்மனியின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 822 பில்லியன் யூரோக்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக, ஜேர்மனிய அதிபர் “அங்கேலா மெர்க்கெல்” அம்மையார் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையால், பொருளாதாரா ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நிவாரண உதவிகளாக பல்வேறு வடிவங்களில் பயன்படக்கூடிய வகையில், பரந்துபட்ட திட்டங்களை முன்னிறுத்தியே இந்த மிகப்பெரிய பொருளாதாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு ஏற்றுமதிப்பொருட்களால் அந்நிய செலாவணியை ஈட்டிவந்த ஜேர்மனி, வாகன உற்பத்தியில் முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Mercedes Benz, BMW, Volks Wagon, Opel, Porche, Audi உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற ஜேர்மனியின் வாகன உற்பத்திச்சாலைகள், “கொரோனா” பரவல் காரணமாக தங்கள் உற்பத்திகளை நிறுத்தி வைத்துள்ளதால், வாகன உற்பத்தியாலும், ஏற்றுமதியாலும் வரக்ககூடிய அந்நிய செலாவணியை ஜேர்மனி இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள