(2) திருமிகு. ராஜி பீட்டர்சன் மீது துப்பாக்கிச்சூடு! பின்னணி என்ன!! – YouTube
பிரபல மனிதவுரிமை செயற்பாட்டாளரும், உலகளாவிய ரீதியில் பெண்களின் உரிமை மேம்பாடு தொடர்பில் ஐ.நா. சபையின் கிளை நிறுவனங்களோடு இணைந்து செயற்பட்டு வருபவருமான திருமதி ராஜி பீட்டர்சன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வொன்றுக்காக அமெரிக்கா சென்றிருந்த திருமதி ராஜி அவர்கள், தமது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வாகனத்தின் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் வாகனத்தின் சாளரங்கள் சேதமாக்கப்பட்டதுடன், திருமதி ராஜி அவர்களின் தலையருகே பாய்ந்த துப்பாக்கி சன்னத்தினால், அவரின் காதருகில் காயமேற்பட்டுள்ளதாகவும், “தமிழ்முரசம்” வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக சந்திப்பில் திருமதி. ராஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மிகுந்த வாகன நெரிசலுடைய நெடுஞ்சாலையில் வைத்து நிகழ்ந்த மேற்படி சம்பவத்தின்போது, சமயோசிதமாக செயற்பட்ட திருமதி. ராஜி அவர்களின் துணைவர், நெரிசலான வாகனப்போக்குவரத்துக்கு மத்தியிலும் சமயோசிதமாக வாகனத்தை செலுத்தி மேலதிக அசம்பாவிதங்களேதும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொண்டதோடு, சம்பவ இடத்துக்கு விரைந்த அமெரிக்க காவல்துறையினர், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்ததாகவும் திருமதி. ராஜி அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.