பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களுக்கு இலங்கையின் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. மறுத்துள்ளது. அத்துடன் புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரே இந்த அச்சுறுத்தல்களுக்கும் தொடர் கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.