மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது ஐ.நா!

You are currently viewing மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது ஐ.நா!

உக்ரைனில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது மற்றும் மனித உரிமை விதிமீறல்களை செய்து போன்ற நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை மீறி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் , உக்ரைனில் மனித உரிமை மீறல்களை புரிந்ததற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஐநா வின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்காவின், நியூயார்க்-கில் ஜெனீவாவை தளமாகக் கொண்ட 193 உறுப்பு நாடுகளை உடைய மனித உரிமை பொதுச்சபையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் அமெரிக்கா தலைமையிலான 93 நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராகவும், 24 நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் வாக்களித்து இருந்தன, மேலும் 58 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குகொள்ளாமல் வெளியேறிவிட்டன.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக பொதுச்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களித்ததால், மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக ஐநா அறிவித்தது, இதில் வாக்களிக்காதவர்கள் கணக்கிடப்படுவதில்லை.

இந்த வாக்கெடுப்பிற்கு பிறகு பேசிய ரஷ்ய துணை தூதர் ஜெனடி குஸ்மின், இந்த நடவடிக்கையை “சட்டவிரோதமான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை” என்று குற்றம்சாட்டினார், பின்னர் ரஷ்யா மனித உரிமை கவுன்சிலில் இருந்து முழுவதுமாக வெளியேற முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைனிய தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா, இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு எதற்கு ராஜினாமாவை சமர்ப்பிக்கவேண்டும் என கூறினார்.

ரஷ்யாவின் மூன்றாண்டு பதவி காலத்தில் தற்போது ரஷ்யா இரண்டாவது ஆண்டில் இருக்கும் நிலையில் இந்த இடை நீக்கமானது செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply