அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீதிபதி ஒருவரது வீட்டில் இருந்து 47 துப்பாக்கிகள் கண்டுபிடிக்க சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த 72 வயது நீதிபதி ஜெப்ரி பெர்குசன், அவரது மனைவி ஷெர்லி பெர்குசனுடன் இணைந்து அனஷிம்ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
நீதிபதி கணவர் ஜெப்ரி பெர்குசன், அவரது மனைவி ஷெர்லி பெர்குசன் இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நீதிபதி ஜெப்ரி பெர்குசன், அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
நீதிபதி ஜெப்ரி பெர்குசன் எதற்காக மனைவியை சுட்டுக் கொன்றார் என்பது தெரிய வராத நிலையில், அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் நீதிபதி ஜெப்ரி பெர்குசனை பொலிஸார் கைது செய்தனர்.
இதனிடையே பொலிஸார் நீதிபதி ஜெப்ரி பெர்குசன் வீட்டில் சோதனை நடத்தினர், அப்போது அவரது வீட்டில் இருந்து பொலிஸார் 47 துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இத்தனை துப்பாக்கிகளை எப்படி இங்கு வந்தது என்பது தெரியவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நீதிபதி ஜெப்ரி பெர்குசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.