கனடாவில் கொரோனாவின் கொடூரத்தில் நேற்று துணைவியார் மரணம், இன்று கணவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து கெரோனா தாக்குதலுக்கு மரணமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன மிகவும் நெஞ்சை நெருடுகின்ற இச்செய்தியானது உலகத்தமிழர்களை உலுக்கியுள்ளது. இவர்களின் இழப்பால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

முன்னைய செய்திகள்
கொரோனாவிற்கு நெடுந்தீவுப் பெண் பலி! நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான இவருக்கும் கணவர் நாகராஜாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறலால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் இன்று (13.04.2020) திங்கட்கிழமை உயிரிழந்தார். இவருடைய கணவர் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தனர். இவர்களின் பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு தற்போது குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். இவருடைய கணவர் குணமடைந்து விரைவில் வீடுதிரும்புவதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
(எரிமலையின் செய்திப் பிரிவு)