பிரான்சில் விசேட நிதி உதவி – இன்று பிரதமர் அறிவித்தார்,அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் !

You are currently viewing பிரான்சில் விசேட நிதி உதவி – இன்று பிரதமர் அறிவித்தார்,அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் !

பிரான்ஸில் வீடுகளுக்குள் முடங்கியதால் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்கென ஒரு பில்லியன் ஈரோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் விசேட நிதி உதவி - இன்று பிரதமர் அறிவித்தார்,அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் ! 1

அடிப்படையில் குடும்பம் ஒன்றுக்கு 150 ஈரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கியிருக்கும் நிலையில் உள்ள குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குழந்தை ஒன்றுக்கு தலா 100 ஈரோக்கள் மேலதிகமாக சேர்த்து வழங்கப்படும்.

ஏற்கனவே RSA என்னும் குடும்ப நல உதவிக் கொடுப்பனவுகளைப் பெறுகின்ற குடும்பங்களுக்கு இது மேலதிக உதவு தொகையாக கிடைக்க உள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் இந்த விவரங்களை பிரதமர் எத்துவா பிலிப் அறிவித்தார்.

திங்களன்று சுமார் 36 மில்லின் பேர் பார்வையிட்ட தொலைக்காட்சி உரையில் வறிய குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் விசேட நிதி உதவிகள் கிடைக்கும் என்று அரசுத்தலைவர் அறிவித்திருந்தார். அதன் படி உதவி வழங்கும் உத்தேச நடைமுறைகளை அரசு தயாரித்திருக்கிறது.

குழந்தைகளோடு அவர்கள் தேவைகளை நிறைவுசெய்ய அவதிப்படும் சுமார் 4 மில்லியன் குடும்பங்கள் இந்த விசேட நிதி உதவியைப்பெறுவர் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது

கல்விக்காக குடும்பத்தை விட்டு தொலைவில் தங்கி இருக்கவேண்டிய மாணவர்களில், தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலையில் உள்ளவர்களும் விசேட கொடுப்பனவை பெறவுள்ளனர்.

வரும் மே 15 ஆம் திகதி அளவில் இந்தக் கொடுப்பனவுகளை வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை –

கொரோனோ வைரஸுக்கு முகம் கொடுத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் சகல மருத்துவப் பணியாளர்களுக்கும் எந்த அறவீடுகளும் இன்றி 500 ஈரோக்கள் விசேட கொடுப்பனவு கிடைக்கவுள்ளது. தெற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பிராந்தியங்களில் பணிபுரிவோருக்கு இத்தொகை 1500 ஈரோக்களாக அதிகரித்து வழங்கப்படும்.

நெருக்கடிக்காலத்தில் களப்பணிகளில் ஈடுபட்டுள்ள சிவில் சேவையாளர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.

இத்தகவல்களையும் பிரதமர் இன்று வெளியிட்டார்.

15-04-2020

(நன்றி குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள