மட்டக்களப்பு மயிலந்தமடு மாதவனை தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம் இன்று (25.10.2023) புதன்கிழமை 41,வது நாளாகவும் எதுவித தீர்வுகளுமின்றித் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
தமிழ்ப் பண்ணையாளர்களின் கால் நடைகளின் மேச்சல்த் தரைகளை சிங்களவர்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ள நிலையிலும், தொடர்ச்சியாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அதனை தடுத்து நிறுத்தி சிங்களவர்களை அங்கிருந்து வெளியேற்றி தமது மேச்சல்த் தறைகளை மீட்டுத் தருமாறு கோரியே தமிழ்ப் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் கூட மேச்சல்த் தரைகள் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் உழவு இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கு குறிப்பிடத் தக்க விடயமாகும்.