மருத்துமனையில் இயந்திர மனிதன்!

You are currently viewing மருத்துமனையில் இயந்திர மனிதன்!


கொரோனாவால் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட மருத்துவமனையின் சுகாதார நிர்வாகம், Giovanni Poggialini எனும் மருத்துவ பொறியியலாளாருக்கு ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அவர் கடந்த வருடம் ரோமில் நடைபெற்ற இத்தாலிய மருத்துவ பொறியியலாளர்களின் வருடாந்த ஒன்றுகூடலின் போது, இந்த சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த இயந்திரம் முன்வைத்த Veneto மாவட்டத்தைச் சேர்ந்த Omitech எனும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார்.
இந் நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக இயந்திரவியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, இயந்திரங்களின் நுண்ணறிவின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது.


இந்த சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட இயந்திரங்களை இலவசமாக வழங்கிய இந் நிறுவனம், கொரோனா அவசரகாலம் முடியும் வரை இச் சேவையைத் தொடர்ந்து நடத்துவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.


மேலும், Circolo di Varese மருத்துவமனையின் நிர்வாகி Francesco Dentali, இத் திட்டத்தை முழு மனதுடன் வரவேற்றுள்ளார். ஏனெனில், இந்த இயந்திரங்களால் மருத்துவர்கள் உபயோகிக்கும் பாதுகாப்பு உபகரணங்களைக் குறைத்து மற்றும் சுகாதார பணியாளர்களைத் தொற்றுக்குள் உள்ளாக்கும் வாய்ப்பையும் குறைக்கின்றது என தெரிவித்துள்ளார்.
முற்றிலும் இயந்திரங்களால் சுகாதார பணியாளர்களை மாற்றீடு செய்ய இயலாட்டிலும், இவை பெரும் உதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.


தனது மகனை கொரோனா காரணமால் சந்திக்க முடியாத Francesco Dentali, இந்த இயந்திரங்கள் பார்பதற்கு ஆறு வயது சிறுவன் போல் இருப்பதால், Tommy  என தனது மகனின் பெயரைச் சூட்டி தனது மனதைத் தேற்றிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.   


எனவே, இவை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறையின் இன்னொரு தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள