ஸ்பெயினில் கொரோனா ; ஸ்பெயினில் 674 புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing ஸ்பெயினில் கொரோனா ; ஸ்பெயினில் 674 புதிய கொரோனா மரணங்கள்!

ஸ்பெயினில் 12,418 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை இறந்துள்ளனர் என்றும் நேற்று முதல் 674 புதிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் Sky Breaking News தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும், நேற்று ஸ்பெயினில் முந்திய 24 மணி நேரத்தில் 809 புதிய கொரோனா இறப்புகள் ஏற்பட்டதாகவும் Reuters தெரிவித்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 674 ஆக உள்ளதென்பது கடந்த ஒன்பது நாட்களில் ஸ்பெயினில் மிகக் குறைந்த அதிகரிப்பு என்று NTB எழுதியுள்ளது.

இதுவரை ஸ்பெயினில் 130.759 தொற்றுக்கள் பதிவாகி உள்ளன, 12418 பேர் இறந்துள்ளனர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள