இந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பணியில் இருந்த, ULLEVÅL மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கண் மருத்துவ துறையில் பணியாற்றுபவர் என்றும், குறித்த ஊழியர் சமீபத்தில் விடுமுறையில் இத்தாலி சென்று வீடு திரும்பியிருந்தார் என்றும், மேலும் அவர் அங்குதான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவமனை நம்புவதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் குறித்த ஊழியர் இப்பொழுது தனது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார் என்று தலைமை நிர்வாக அதிகாரி Bjørn Atle Bjørnbeth தெரிவித்துள்ளார்.