யாழ்ப்பாணத்தில், மருத்துவர் உட்பட 4 பேர், கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணம் கிளையில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடையவரே கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். சாவகச்செரியில் உயிரிழந்த பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிளவானோர் உயிரிழந்துள்ளனர். 224 பேர் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2020 ஜனவரியில் ஆரம்பித்த போதும் வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் முதலாவது தொற்றாளர் கண்டறியப்பட்டார்.
அன்றிலிருந்து நேற்றுவரையான 17 மாதங்களில் வடக்கு மாகாணத்தில் 23 ஆயிரத்து 36 பேர் கோவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 224 பேரும் வவுனியா மாவட்டத்தில் 55 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேரும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தலா 15 பேரும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.