அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(17) நண்பகல் கூடியவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத் துறை சார்ந்தவர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள், வங்கிகளின் தொழிற்சங்க அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் , இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அரசாங்கம் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வை தர முன்வரவேண்டுமென போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.