மலையக இளைஞர் மட்டக்களப்பில் தொடர் போராட்டம் ; நிரந்தர காணி உரிமைக்கு கோரிக்கை!

You are currently viewing மலையக இளைஞர் மட்டக்களப்பில் தொடர் போராட்டம் ; நிரந்தர காணி உரிமைக்கு கோரிக்கை!

தற்போது நாட்டில ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த வித அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் மலையக மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான நிரந்தர தீர்வான நில ( நிலம் ) காணி உரிமையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்து நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தொடர் போராட்டம் ஒன்றினை மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள ஒவையார் சிலைக்கு முன்னாள் முன்னெடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டம் டங்ஸ்டன்ட் கற்ரல் பிரிவு பூண்டுலோயா பகுதியை சேர்ந்த சண்முகம் மகேஸ்காந்த் என்ற இளைஞன் தனது தாய் , இரு சகோதரிகளுடன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் மட்டக்களப்பு வாழைச்சேனை முல்லை நகர் பகுதியில் குடியேறி வாழ்ந்து வருவதாக தெரிரிவிக்கும் குறித்த இளைஞன் தற்போது நாட்டில ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் தொற்றுநோய் காரணமாக மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விவசாயம் செய்து வாழ்வதற்கு நிறத்தர வாழ்விடமாக நிரந்தர ( நிலம் ) காணி உரிமை க்காக “மலையகத்தின் ஒரு குரல் ” என்றும் விடுதலை வேண்டும் என பதாகையினை காட்சிப்படுத்திய வாறு தமக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தினை முன்னெடுப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மலையக இளைஞர் மட்டக்களப்பில் தொடர் போராட்டம் ; நிரந்தர காணி உரிமைக்கு கோரிக்கை! 1
மலையக இளைஞர் மட்டக்களப்பில் தொடர் போராட்டம் ; நிரந்தர காணி உரிமைக்கு கோரிக்கை! 2

பகிர்ந்துகொள்ள