முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாற்று கிராமத்தில் முதன்மை வீதிக்கு அருகில் குடியிருப்பாளரின் வீட்டு கிணறு ஆபத்தான நிலையில் உடைந்து வருவதால் அருகில் உள்ள வணிக நிலைய கட்டம் இடிந்து விழும் அபாய நிலை காணப்படுவதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி கடை ஒன்றினை வைத்திருக்கும் உரிiமாயர் இந்த ஆபத்து குறித்து கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தியும் காணியின் உரிமையாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
காணியின் உரிமையாளர் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் கிணற்றினை கட்டுவதாக சொல்லி வந்த நிலையில் அண்மையில் பெய்த கடும் மழையினர் கிணறு உடைந்து கடையின் கட்டிடத்திற்கு அருகில் உடைப்பு எடுத்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் கடைக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுளளது.
மூங்கிலாற்கு பகுதியில் பிரதேச சபையினரால் வீதிகள் போடப்பட்ட போதும் சரியான வடிகாலமைப்பு இல்லாத காரணத்தினால் மழைவெள்ளம் காணிகளுக்குள் செல்கின்றன இவ்வாறே இந்த கிணற்றினை அண்டிய பகுதிகளில் மழைவெள்ளம் காணப்பட்டு கிணறு உடைப்பெடுக்கும் அபாய நிலை காணப்படுவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புதுக்குடியிருபு;பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.