சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்கெனவே வழங்கிய வாக்குறுதிகளுக்குப் பதிலாக மாற்று அணுகுமுறை ஒன்றை அறிவித்துள்ளமை தொடர்பில் நான் கவலையடைகின்றேன் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்தார்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக ரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும்
தோல்வி அடைந்திருக்கின்றன. மற்றுமொரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் நான் இணங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனிவா பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மிச்செல் பச்லட் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் இலங்கை தொடர்பில் ;மேலும் குறிப்பிடுகையில்,
சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் மனித உரிமை விவகாரத்தில் ஏற்கெனவே வழங்கிய வாக்குறுதிகளுக்கு பதிலாக மாற்று ; அணுகுமுறை ஒன்றை அறிவித்துள்ளமை தொடர்பில் நான் கவலையடைகின்றேன். இலங்கை அரசாங்கமானது அனைத்து மக்களினதும் ; தேவைகளை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். முக்கியமாக சிறுபான்மை மக்களின் தேவைகள் குறித்து செயற்படவேண்டும்.
கடந்த சில வருடங்களாக உருவாக்கிய திட்டங்களை தொடருமாறும் பாதுகாக்குமாறும் நான் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன். அதுமட்டுமன்றி ;காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு வழங்கும் அலுவலகம் என்பன வற்றுக்கு அரசியல் மற்றும் வளரீதியான ஒத்துழைப் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.
காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நீதியைப் பெறுவதற்கும் நிவாரணத்தைப் பெறுவதற்கும் உரிமை இருக்கிறது. 19ஆவது திருத்த சட்டத்தின் கீழ் இலங்கையின் சுயாதீன நிறுவனங்கள் பலமடைந்தன. இவை ஜனநாயக கட்டமைப்பின் மிக முக்கிய விடயமாகும். அதுமட்டுமன்றி சிவில் சமூகம் சுயாதீன ஊடகத்துறைக்கான இடைவெளி பாதுகாக்கப்பட வேண்டும்.
மிக முக்கியமாக அண்மையில் இலங்கையின் சிவில் தொழில்பாடுகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சென்றுள்ளதையும் அல்லது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பொறுப்புக்கு சென்றுள்ளமை மற்றும் மனித உரிமை காப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றமை எனக்கு பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வைராக்கிய பேச்சுக்கள் அதிகரித்து செல்வதை காண்கின்றோம். கடந்த கால மனித உரிமை மீறல்களுக்காக தண்டனை வழங்கப்படாத கலாசாரம் தொடர்கின்றமை மிக அடிப்படை பிரச்சினையாக இருக்கின்றது
பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளகரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வி அடைந்திருக்கின்றன. மற்றுமொரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் நான் இணங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந் தும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி கடந்த கால மீறல்கள் மீண்டும் நடைபெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே ஐ.நா. மனித உரிமை பேரவையானது இலங்கை விடயத்தில் தொடர்ந்தும் அவதானத்துடனேய இருக்கவேண்டும்