மாற்று திறனாளிகளின் ”மறுக்கப்பட்ட மனிதங்கள்” இசை வெளியீட்டு நிகழ்வு!

You are currently viewing மாற்று திறனாளிகளின் ”மறுக்கப்பட்ட மனிதங்கள்” இசை வெளியீட்டு நிகழ்வு!

மாற்று திறனாளிகளின் மறுக்கப்பட்ட மனிதங்கள் இசை வெளியீட்டு நிகழ்வு!
மாற்று வலுவுடையோர் மனங்களின் ஆதங்கங்களை கொண்டுவரும் பாடல் இசை வெளியீட்டு நிகழ்வு ஒன்று முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் அமைந்துள்ள ஒளிரும் வாழ்வு இல்லத்தில் நடைபெற்றுள்ளது.


அன்னை திரேசாவின் பிறந்த நாளினை முன்னிட்டு (26.08.2020) அன்று தாயக கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவான ‘மறுக்கப்பட்ட மனிதங்கள்’ இசை வெளியீட்டு நிகழ்வு அ.வினோத் தலைமையில் நடைபெற்றுள்ளது.


மாற்றுத்திறனாளிகள் வேதனையினை,அவர்களின் தேவையினை உள்ளக்குமுறல்களை வெளிக்கொணரும் பாடல் வரிகளை அ.வினோத் எழுத பாடலுக்கான இசையினை விமல் அவர்களுகம் பாடலை மதமீரா அவர்களம் பாடியுள்ளார்கள்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக தேசபந்து கலைஇளவரசன் வன்னியூர் செந்தூரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி கலாலய நாடகக்குழுவின் ஸ்தாபகர் நாடக நடிகர்ஆசிரியர் பொ.உமாகாந்தன்,அம்பலப்பெருமாள் குளம் அ.த.க.பாடசாலை முதல்வர் ச.சசிகுமார்,யாழ்பல்கலைக்கழக தமிழ்துறை முன்னால் உதவி விரிவுரையாளர் ஜெ.ஜெயப்பிரசாந்தி,அகில இலங்கை கிருபா மக்கள் சேவை அறக்கட்டளை தொழிலதிபர் அ.கிருபாகரன் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளதுடன் பிரதம விருந்தினரால் இறுவட்டு வெளியீட்டுவைக்கப்பட்டு வெளியீட்டு உரை கலை நிழக்வுகள் என்பன சிறப்புறடை நடைபெற்றுள்ளது.

பகிர்ந்துகொள்ள