மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்!

You are currently viewing மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்!

தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களின் கோப்பாய் நினைவாலயம்   மாவீரர்களின் உரித்துடையோர்களால் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நினைவாலயம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கோப்பாய் துயிலுமில்ல முன் வீதியில் மாவீரர் சேரமான் அவர்களின் புதல்வன் ருசாந்தன் அவர்களினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

அதன்பின் மாவீரர் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்லறை நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு இறுதியாக தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் ஈழத்தரசி மற்றும் புலிக்குட்டி ஆகிய மாவீர்களின் தாயார் மலர்ராணி குமாரசாமி அவர்களினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தி நினைவாலயம் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நினைவாலயத்தில் வருகின்ற 27ம் திகதி மாவீரர் நாள் வரை உறவுகள் வருகை தந்து தங்கள் மாவீரசெல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்துவதோடு எம் இளைய தலைமுறையினரையும் அழைத்துவந்து  எம் மறவர்களின் வீர வரலாற்றை கடத்துங்கள் என அனைவரிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மக்கள் உணர்வோடு தமது வணக்கத்தை செலுத்திவருகின்றனர்.

மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்! 1
மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்! 2
மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்! 3
மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்! 4

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.

மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்! 5

 

 

மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்! 6
தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள்  வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.
மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்! 7
தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை (21) மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்! 8

 

 

மாவீரர் வாரத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ தாயகம்! 9
பகிர்ந்துகொள்ள

Leave a Reply