மீண்டும் பாரிஸில் திரண்ட நூற்றுக்கணக்கானோர்!

You are currently viewing மீண்டும் பாரிஸில்  திரண்ட நூற்றுக்கணக்கானோர்!

பிரான்சில் பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட கருப்பின இளைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், அதிகாரிகளின் தடையை மீறி நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளனர். பாரிஸ் நகரில் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி பேரணியில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். பலர் கருப்பு உடை அணிந்து, அதில் அதாமாவுக்கு நீதி வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

2016ல் அதாமா Traoré என்ற 24 வயது கருப்பின இளைஞர், பொலிஸ் காவலில் மரணமடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் அந்த இளைஞருக்காக நினைவஞ்சலி பேரணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அதிகாரிகள் தரப்பு அனுமதி மறுத்துள்ளனர்.

10 நாட்களுக்கு முன்னர், பொலிஸ் வன்முறைக்கு 17 வயது இளைஞர் கொல்லப்பட்ட நிலையில், சனிக்கிழமை சுமார் 30 நகரங்கள் மற்றும் கிராமங்களில் நினைஞ்சலி பேரணியை முன்னெடுக்க பொதுமக்கள் அமைப்புகள் திட்டமிட்டிருந்தது.

மேலும், Val-d’Oise பகுதியில் அதாமாவுக்கான நினைவஞ்சலி கூட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிகாரிகளால் தடை விதிக்கப்பட, நீதிமன்ற மேல்முறையீட்டிற்குப் பிறகு முடிவு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நினைஞ்சலி கூட்டமானது Place de la République பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், பாரிஸ் நகரில் இரண்டாவது பேரணிக்கு அனுமதி அளிக்கப்படாது எனவும், உரிய பாதுகாப்பை வழங்க முறைப்படி அணுகவில்லை எனவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய அதாமாவின் சகோதரி அஸ்ஸா Traoré, பொலிஸ் வன்முறையை கண்டிக்கவும் இளையோருக்காகவே நாங்கள் இந்த பேரணியை முன்னெடுக்கிறோம் என்றார்.

பிரான்ஸ் நிர்வாகம் நவ-நாஜிகளின் பேரணிகளுக்கு அனுமதி அளிப்பார்கள், ஆனால் நமக்கு அணுமதி மறுப்பார்கள் என்றார். மேலும், பிரான்ஸ் பொலிசார் இனவாதிகள் என குறிப்பிட்ட அஸ்ஸா, அவர்கள் உண்மையில் வன்முறையாளர்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments